பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின்
கடிதத்தில் , கோயில்களின் நகரமாம் கும்பகோணம் மாநகரில் , தென்பரதக்
கும்பமேளா என்று அனைவராலும் அழைக்கப்படும் மாகாமகப் பெருவிழா 12
ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் , குடந்தையில் உள்ள
மகாமகத் திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று சிறப்பாக
நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு 12 சைவத் திருக்கோயில்கள்
மற்றும் 5 வைணவத் திருகோயில்களின் சுவாமிகள் , தீர்த்தவாரி செய்வதற்காக
வருகை தருகின்றனர் என்றும் , இப்பதினேழு சுவாமிகளையும் தரிசனம்
செய்வதற்காகவும் , மகாமகத் திருக்குளத்தில் , புனித நீராடுவதற்காகவும்
ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை
புரிகின்றனர் என்றும் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் தம் முன்னோர்களுக்குத்
திதி கொடுக்கவும் செய்கின்றனர் என்றும் , இந்த வருடம் 06.03.2023 அன்று
மாசிமகத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் , இத்தகையப் பெருமை வாய்ந்த மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர்
விடுமுறையாக அறிவிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாண்புமிகு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின்
கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து , அதனை ஏற்றுக் கொண்டு . அவ்வாறே
ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர்
விடுமுறை அறிவித்து அரசு ஆணையிடுகிறது.
இந்த
உள்ளூர் விடுறை நாட்கள் செலாவணி முறிச் சட்டம் , 1881 ( Under Negotiable
Instruments Act , 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , உள்ளூர்
விடுமுறை அறிவிக்கும்போது , மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , சார்நிலைக்
கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு
குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்
தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
GO NO : 297 , DATE : 10.05.2023 -
Download here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.