உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.
ஐக்கிய
நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு அமைப்பு உலக நாடுகளில் உள்ள
மக்களின் மகிழ்ச்சியை, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை மதிப்பு ஆகியவற்றின்
அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் 2021-
ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மகிழ்ச்சியான நாடுகள் முதல் எட்டு இடங்களில் ஐரோப்பிய நாடுகள் உள்ளது.
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 146 நாடுகள் இடம் பெற்றுள்ள
நிலையில், தொடர்ந்து 5-வது முறையாக பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதனை
தொடர்ந்து இரண்டாம் இடத்தில் டென்மார்க், மூன்றாமிடத்தில் ஐஸ்லாந்து,
நான்காமிடத்தில் சுவிட்சர்லாந்து, ஐந்தாமிடத்தில் நெதர்லாந்தும்
இடம்பெற்றுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த பட்டியலில் 136 ஆவது
இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை தாலிபான்கள் ஆட்சி
அதிகாரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது.
ஆயக்குடி இலவச பயிற்சி
மையத்தின் 1000 வினாவிடை ஆன்லைன் தேர்வெழுத
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.