கீரைகள் எல்லாமே உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன. அதிலும் அரை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
அரை கீரை பயன்கள்
அரை கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.
காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது.
அரை கீரை கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.
கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து உறுப்பானது பலமாகும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.