திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த கல்வியாண்டு
முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. நோய்
பரவல் அதிகம் இருந்தபோதும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்
தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் ேகரளாவில் 2021 - 22ம் கல்வியாண்டு
நாளைமுதல் தொடங்குகிறது. இதையடுத்து 1 முதல் 12 வரையிலான வகுப்புகள் நாளை
முதல் தொடங்குகிறது. புதிய கல்வியாண்டை கேரள முதல்வர் பினராயி விஜயன், நாளை
காலை 8.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் அரசு மகளிர்
பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
இதேபோல ஆன்லைன் கல்லூரி
வகுப்புகளும் நாளை தொடங்குகின்றன. கொரோனா பரவலின் 2வது அலை பாதிப்பு அதிகம்
இருந்து வரும் நிலையில், சென்ற கல்வியாண்டின் பிளஸ் 1 தேர்வு மற்றும்
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை நடத்துவது குறித்து இன்னும்
முடிவெடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.