Thursday, 1 February 2024

Pre Matric / Post Matric - Scholarship 2023 - 2024 | Website Open Now :

 PRE MATRIC /POST MATRIC 

2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியதாக சேர்க்கை பெற்ற FRESH STUDENTS  SC/ST/SCA மாணவர்கள்  PRE MATRIC /POST MATRIC கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதளம் 01.02.2024 முதல் திறப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Press Release - Download here

ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சிரமமின்றி கல்வி பயில பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதில் , ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் " போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் " , " ப்ரிமெட்ரிக் மற்றும் தூய்மை பணிபுரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் " , " மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் " , " உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டம் " , " பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தலையாய திட்டங்களாகும் . 2023-2024 ஆம் கல்வியாண்டில் , மேற்காணும் திட்டங்களின் கீழ் தோராயமாக 14 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் பயன் அடைவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.